செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

கடகம்: தை மாத ராசி பலன்கள் 2020

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - ரண, ருண  ஸ்தானத்தில் குரு, சனி, கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்   ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
உடனிருப்பவர்களுடன் எப்போதும் கவனமாக பழகும் கடகராசியினரே, இந்த மாதம் எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். உங்கள் வாக்குவன்மையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பணப் பிரச்சனை தீரும்.  நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
 
குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மனம் நெகிழும் படியான சூழல் உருவாகும். மதிப்பும், மரியாதையும் கூடும். தம்பதிகளுக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உடல்நலனைப் பொறுத்தவரை மறைவிடங்களில் இருந்த வந்த பிரச்சனைகளில் முன்னேற்றம் காணப்படும். 
 
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் இருந்த தடைகள் விலகும். உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக நேரம் உழைக்க நேரிடும். சிலர் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடலாம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். 
 
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புகழும் பாராட்டுகளும் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில வாய்ப்புகளும் கிடைக்கலாம். வேலையில் லாபம் அதிகரிக்கும். 
 
அரசியல்துறையினர் வாக்கு கொடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். 
 
பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை  தரும். 
 
மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனகசப்பு மாறும்.
 
புனர் பூசம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன்  அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. எதிலும் நல்லது  கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க  பெறுவார்கள். 
 
பூசம்:
 
இந்த மாதம் வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும். வீண் அலைச்சல் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.  பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். 
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்ப  உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை  குறையும். 
 
பரிகாரம்: அன்னை பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள் - புதன்
சந்திராஷ்டம தினங்கள்:  ஜனவரி 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 20, 21.